அரசாங்கத் திணைக்களமொன்றுக்குச் சொந்தமான பிக்கப் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து யாழ். வல்லைப் பாலத்திற்கருகிலுள்ள கடனீரேரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(19) முற்பகல்-10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எனினும் சம்பவத்தில் எவருக்கும் தெய்வாதீனமாகக் காயங்கள் எதுவும் ஏற்படாத போதும் பிக்கப் வாகனம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
நீரில் மூழ்கியுள்ள குறித்த வாகனத்தை மீட்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ இடத்திற்கருகில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
0 comments:
Post a Comment