திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் 'சிறுவர்கள் சமூக இணக்கப்பாட்டின் முகவர்களாகிறார்கள்' எனும் தலைப்பிலான சிறுவர் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுவர் நாடாளுமன்ற நிகழ்வு இரண்டாவது தடவையாக நாளை ஞாயிற்றுக்கிழமை(04) காலை- 09.30 மணி முதல் பிற்பகல்- 12.30 மணி வரை இல- 286,பிரதானவீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் இடம்பெறவுள்ளது.
திருமறைக் கலாமன்றத்தின் பிராந்திய மன்றங்களைச் சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் சிறுவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு திருமறைக் கலாமன்றத்தின் சிறுவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் சிறுவர் தொடர்பான பிரச்சினை,சமூக ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றில் தமது பங்களிப்பு மற்றும் திருமறைக் கலாமன்றத்தின் அனுபவம், சிறுவர் உரிமை, சிறுவர் பாத்துகாப்பு மற்றும் சிறுவர் சமவாயம் என்பன தொடர்பாகவும் உரையாற்றவுள்ளனர்.
கடந்த ஆண்டிலும் இத்தகைய சிறுவர் நாடாளுமன்றம் திருமறைக் கலாமன்றத்தால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment