//]]>
அல்லிப்பூ பறிக்க படகில-

Sunday, July 16, 2017

யாழ். கந்தர்மடம் வேதாந்த மடத்தில் இரத்ததான முகாம் (Photos)


யாழ். கந்தர்மடம் ஸ்ரீ சிவகுருநாத குருபீடம் மகாதேவ சுவாமிகள் ஆச்சிரமத்தினரின் (வேதாந்த மடம்) ஏற்பாட்டில் ஸ்ரீமத் சோமாஸ்கந்தவேல் சுவாமிகளின் பதினோராவது குருபூசை தினத்தை முன்னிட்டு  இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(16)  ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. 

ஆச்சிரமப் பீடாதிபதி வேதவித்தியாசகர் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் காலை-09.30 மணி
முதல் பிற்பகல்-01 மணி வரை இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாமில் 25 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். 

இரத்ததானம் வழங்கிய இளைஞர்கள் அனைவருக்குக்கும் மரநடுகையை ஊக்குவிக்கும் வகையில் ஆச்சிரமத்தினரால் பயன்தருமரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.   

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்