//]]>

Wednesday, January 17, 2018

வெளியிடப்பட்டது தமிழ்த்தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம்(Photos)

தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஞ்ஞாபனம்  இன்று புதன்கிழமை(17)  முற்பகல்- 10 யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ். மாநகரசபை முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் இணைந்து தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தனர்.  அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராஜா தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பாக வட- கிழக்கில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment