//]]>

Wednesday, March 7, 2018

அவசரகால சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா போர்க்கொடி!

நேற்றைய தினம்(06) அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல் விடுத்துள்ளது.

சிங்கள- முஸ்லீம்களுக்கிடையே வன்முறைகள் பரவியுள்ள நிலையில் நேற்றைய தினம் அவசரகாலச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.

இந் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசரகாலச் சட்டத்தின் எதிரொலியான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அமைதியான சகவாழ்வுக்கு முக்கியம். மத வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராகச் செயற்படவும், மத சிறுபான்மையினரையும், அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பது முக்கியமானது.அனைவரினதும் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களைப்  பாதுகாக்கும் அதேவேளை அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரகாலச்சட்டத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment