//]]>

Thursday, January 25, 2018

கூட்டமைப்பு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு:கூட்டு எதிரணி வழக்குத் தாக்கல் செய்யுமாம்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைப் பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுத் தலா இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடாத்த வேண்டும் எனவும், அல்லாவிடில், இதற்கெதிராக கூட்டு எதிரணி வழக்குத் தாக்கல் செய்யும் என மகிந்த ராஜபக் ஷ ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும்,  இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம்(24) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியதற்காகக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா -2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணை நடாத்த வேண்டும். அல்லது, இது தொடர்பில் இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாவிடில், இதற்கெதிராக கூட்டு எதிரணி வழக்குத் தாக்கல் செய்யும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment