பதுளை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஆர். பவானி ஊவா மாகாண முதலமைச்சர் முன்பாக முழந்தாழிட்டு மண்டியிட்ட சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணைகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை(25) காலை -10 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஏழு பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல உள்ளிட்ட ஏழு பேருக்கே மேற்கண்ட உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல, மாகாணக் கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலயக் கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவரையே இவ்வாறு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment