//]]>

Tuesday, January 31, 2017

வெகு விமரிசையாக நடந்து முடிந்த யாழ்ப்பாணத்தின் மாபெரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Video, Photos)


யாழ்ப்பாணத்தின் மாபெரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் கடந்த 27ம் திகதி சனிக்கிழமை தொடக்கம்29ம் திகதி வரை யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

8 ஆவது முறையாக நடைபெற்ற  இந்த கண்காட்சியினை வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் ஆகியோர்  நாடா வெட்டித் திறந்து  வைத்தனர்.

இந்த கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தையில் சிங்கப்பூர், இந்தியா மலேசியா சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அந்நாட்டு விற்பனைப்  பொருட்களும் சந்தைப்படுத்தப்பட்டன.
கட்டட தொழிற்துறை மருத்துவ தொழிற்துறை உணவு குளிர்பானங்கள் பொதியிடல் தொழில் துறை வாகன தொழில் துறை தகவல் தொழில்நுட்ப துறை நிதிசேவைகள் ஆடைத்தொழிற்துறை மற்றும் விவசாயம் பாவனையாளர்களுக்கான பொருட்கள் உள்ளிட்டவை இந்த 3 நாள் கண்காட்சியில் இடம்பெற்றன. அத்துடன் கலை நிகழ்வுகளும் இரவு அரங்கில்  நடை பெற்றன .

 இக் கண்காட்சி  தொடர்பாக  பங்கேற்பாளரான எஸ் .சுபாஸ்சிங்கம்  கருத்துத் தெரிவிக்கையில்,

 நான்  வவுனியாவில் இருந்து  வருகை  தந்துள்ளேன். இக்கண்காட்சி  நல்ல விடயம் 30 ரூபா நுழைவுச் சீட்டு பரவாயில்லை. கடந்த வருடத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் 200 கூடங்கள் வரை அமைக்கப்பட்டிருந்தன. ஆனால்,  இம்முறை 300க்கும் மேற்கட்ட கண்காட்சி கூடங்கள் இடம்பெற்றிருப்பதாக அறியக் கிடைக்கின்றது.

ஆனால்  அதிகம் வெவ்வேறு தரத்திலான இலத்திரனிய  உற்பத்திகள் வந்துள்ளன . இன்று எம் மக்கள் இப்படியான கூடங்களுக்கு அதிகம் வரத்தொடங்கி  உள்ளனர் . ஆனால்   மக்களின் ஆர்வங்களுக்கும் விருப்புக்கும் ஏற்ப விடயங்கள் போதவில்லை.

இப்போது வடக்கை லீசிங்  ஆக்கிரமித்து உள்ளது. அதற்குரிய பொருட்கள் அதிகம் இருந்தன. ஆயினும் மக்களின் தேவைகளை அறிந்து திட்டமிடுவதும்  அவசியம். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியம்  கொடுக்க வேண்டும். வடக்கில் கிராமிய உற்பத்திகளும்  உள்ளன. அவற்றை வெளிநாட்டவர்  அறிய வேண்டும் என்றார்.

இறுதி நாளான நேற்று சிறுவர்கள், பெரியவர்கள் என அதிகளவு மக்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள், வீடியோ: ஐ.சிவசாந்தன்-






































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment