//]]>

Tuesday, January 16, 2018

மக்களுக்குச் சேவை ஆற்றுபவர்களை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும்(Photo)

ஊழலற்ற ஆட்சியில் மாற்றத்தினையும், நேர்மையாக மக்களுக்குச் சேவை ஆற்றுபவர்களையும் இனங்கண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என வடக்கு,கிழக்கு இணைந்த மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான என்.வரதராஐப்பெருமாள் தெரிவித்தார்.

தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் எற்பாட்டில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர்களுடான சந்திப்பும் இன்று செவ்வாய்க்கிழமை(16) யாழ். வை.எம்.சி.மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இரு பிரதான கட்சிகள் காணப்படுகின்றன. அக் கட்சிகள் கூட்டு அரசியல் கட்சியாகக்  காணப்படுகின்றன. இது ஒரு நல்ல விடயம். ஆகையால்,   தமிழ்மக்களின் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் எந்த விதமாக உயர்ந்த பட்சத்தில் அடைய வேண்டுமோ அவற்றினை நாங்கள் விரைவாக பெற வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment