சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். உரும்பிராய் அன்னங்கைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை வெளிநாடொன்றுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நபரொருவர் கடந்த- 2015 டிசம்பர் மாதம் எட்டு இலட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். வாங்கியவர் கூறியது போல் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண் பணத்தை மீள வழங்குமாறு கூறியுள்ளார். எனினும், பணத்தைத் தருவதாகக் கூறிய குறித்த நபர் பணத்தை மீள வழங்காமல் தொடர்ந்தும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எட்டு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment