//]]>
அல்லிப்பூ பறிக்க-

Sunday, February 18, 2018

ஒரே டேக்கில் குறும்படம்..!






படம் மட்டுமல்ல;குறும்படம் எடுப்பதும் சிரமம்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறும்படம் எடுத்து அதன்மூலம் திரையுலகில் இயக்குநராக அடியெடித்து வைப்பவர்கள் அதிகம். யூ-டியூபில் குறும்படங்களை ரசிப்பதற்கென்று ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது.

அந்த வகையில், யூ-டியூபில் பரவலான கவனம் பெற்றுவரும் தலைவியுமாய்நிற்கும் குறும்படம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். ஜி.ஹரி குமரன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஒரு பிரத்யேக சிறப்பம்சம் உள்ளது. அதாவது, ஒரே டேக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இளம் இயக்குநர் ஒருவர் இந்த முறய்சியை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் சிரமமான விஷயம் என்று பார்த்தால், அது ஒளிப்பதிவும், நடிப்பும் என்று கூறலாம். நடிகர்கள் யாரும் கேமராவை பார்த்துவிடக் கூடாது. வசனங்களை சரியாக ஒரே டேக்கில் பேச வேண்டும். ஆனால், இப்படத்தில் நடித்துள்ள 3 பேரும் நடிப்பில் குறையே வைக்கவில்லை. முடிந்த அளவுக்கு அவர்களுடன் நாம் இருப்பது போன்ற ஓர் உணர்வை தங்களது நடிப்பின் மூலம் இவர்கள் கடத்தி விடுகின்றனர்.குறிப்பா வனிதா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் முயன்றால் திரையுலகில் ஒரு ரவுண்ட் வரலாம். ராகுல், ஜெய்தேவ் ஆகியோரும் தங்கள் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பை வழங்கியுள்ளனர்.

யுதிஸ்தரனின் இசை, சிலம்பொலி சொக்கலிங்கத்தின் கேமரா உள்ளிட்டோர் இப்படத்தில் திரைக்குப் பின்னால் தங்களது உழைப்பை வழங்கியுள்ளனர். ஒரு வீட்டுக்குள் மொத்த கதையும் நடக்கிறது என்பதால் கலை இயக்குநர் ஜெனீபருக்கு கொஞ்சம் அதிக பணிதான். ஆனால், அதை சிறப்பாக செய்திருக்கிறார். சரி. படத்தின் கதைக்கு வருவோம். தன் காதலன் மீது ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழக்கும் பெண், சுயமாக (தலைவியாய்) நிற்கிறாள் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. தலைப்பும் மிகப் பொருத்தமாய் உள்ளது.

குறும்பட ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும். ஒட்டுமொத்த குழுவினரையும் வெள்ளித் திரையில் காண விரும்புகிறோம். நல்ல படைப்புடன் வாருங்கள்! படம் யூ-டியூபில் காணக் கிடைக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்