//]]>
அல்லிப்பூ பறிக்க படகில் சென_

Monday, March 5, 2018

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட துயரம்!(Photo)

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரதம் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை(05) முற்பகல்-11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் புகையிரத நிலையத்திலிருந்து சுமார்- 300 மீற்றர் தொலைவிலுள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள  பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து நாகராசா(வயது-36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார்  விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்