//]]>

Sunday, March 4, 2018

நல்லூரில் நந்திக் கொடிகளுடன் கவனயீர்ப்புப் பேரணி(Videos)

வடக்கின் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை(04) நல்லூரில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடாத்தப்பட்டது.
இன்று காலை-09 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் அகில இலங்கை சைவமகாசபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான பேரணியில் மதகுருமார்கள், அகில இலங்கை சைவமகாசபையின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகள்,சமய ஆர்வலர்கள் என்ப பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சைவசமயத்தின் அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான நந்திக் கொடிகளை கைகளில் தாங்கியிருந்தனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் "மாண்புமிகு முதலமைச்சரே.... சைவ சமயத்தைப் பாதுகாருங்கள்!", "வடக்கு மாகாண சபையில் சைவத்திற்குத் தனி அலகு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

குறித்த கவனயீர்ப்புப் பேரணி பிரசித்தி பெற்ற நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு வடக்கின் சைவ ஆலயங்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி விசேட ஒன்றுகூடலொன்றும் இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பேரணியின் நிறைவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment