//]]>

Sunday, January 21, 2018

மைத்திரி எடுத்துள்ள திடீர் முடிவு!

கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கியதேசியக் கட்சியினால் கையாளப்பட்டு வந்த தேசிய பொருளாதாரம் தொடர்பான பொறுப்பைத் தம்வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று(20) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையான அழுத்தங்களுக்குக் கீழ் உள்ளது. இந்த ஆண்டிலிருந்து தேசிய பொருளாதார முகாமைத்துவத்துக்கு நான் தலைமையேற்பேன்.

வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, உள்நாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் தமது நிதியை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லாமல் இங்கேயே முதலிட வேண்டும். இதற்கென, அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment